கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு, காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்தது.
மைசூரு,
கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் ஜீவநதியாக விளங்கி வரும் காவிரி ஆறு கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தில் உதயமாகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜ சாகர்) அணை அமைந்துள்ளது. இந்த அணை மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் அமைந்திருக்கிறது. கேரள மாநிலம் வயநாடு, குடகு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் மழை, காவிரியில் கலந்து கே.ஆர்.எஸ். அணையை சென்றடைகிறது.
அதேபோல் கேரள மாநிலம் வயநாட்டின் மற்றொரு பகுதியில் பெய்யும் மழையானது கபிலா ஆற்றில் கலந்து கபினி அணையை சென்றடைகிறது. கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 2,284.00(கடல் மட்டத்தில் இருந்து) அடி ஆகும். கடந்த சில நாட்களாக கர்நாடகத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையால் கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அந்த அணை தற்போது 2,282.13 அடியை எட்டி உள்ளது. இதேபோல் கே.ஆர்.எஸ். அணையும் வேகமாக நிரம்பி வருகிறது. கே.ஆர்.எஸ். அணையின் மொத்த நீர்மட்டம் 124.80 அடி ஆகும். தற்போது அந்த அணை 107.45 அடியை எட்டி இருக்கிறது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் நேரடியாக தமிழ்நாட்டை சென்றடைகிறது. அதேபோல் கபினி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கபிலா ஆற்றில் பெருக் கெடுத்து ஓடி, காவிரி ஆற்றில் கலந்து அதன்பின் தமிழ்நாட்டை சென்றடைகிறது.
இதனால் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் மிக முக்கிய அணைகளாக கருதப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 18,997 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 19,583 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதேபோல் கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 16,604 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையில் இருந்து வினாடிக்கு 3,494 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழ் நாட்டிற்கு மொத்தம் வினாடிக்கு 23,077 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 28-ந் தேதி இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழ்நாட்டுக்கு மொத்தம் வினாடிக்கு 28,880 கன அடி நீர் சென்றது. நேற்று முன்தினம் வினாடிக்கு 25,556 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 23,077 கன அடி வீதம் தண்ணீர்தான் தமிழ்நாட்டுக்கு சென்றுள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து நாளுக்குநாள் குறைந்து வருவதால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story