பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 1 July 2018 5:15 AM IST (Updated: 1 July 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் அளிக்கலாம்.

தேனி,

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் அளிக்கலாம்.

இதுகுறித்து தேனி மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க, விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை வருகிற அக்டோபர் மாதம் 15-ந்தேதிக்குள் உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் வங்கிக் கணக்கு எண்ணை தவறாமல் குறிப்பிட வேண்டும்.

அதேபோல், கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து அக்டோபர் 15-ந்தேதிக்குள்ளும், புதிதாக உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30-ந்தேதிக்குள்ளும் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்களை www.tn.gov.in/bcmbcdept என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவங்களையும் இந்த இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story