வேலூர் மாவட்டத்தில் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் இடமாற்றம்


வேலூர் மாவட்டத்தில் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 1 July 2018 5:15 AM IST (Updated: 1 July 2018 5:23 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் தாசில்தார்கள் மற்றும் துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் தாசில்தார்கள் மற்றும் துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தாராக பணிபுரிந்து வரும் பாக்கியநாதனுக்கு தற்காலிக பதவி உயர்வு அளிக்கப்பட்டு பெங்களூரு- சென்னை விரைவுப்பாதை தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகத்தில் தனி தாசில்தாராகவும், திருப்பத்தூர் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியாற்றிய மோகனுக்கு தற்காலிக பதவி உயர்வு அளிக்கப்பட்டு வாலாஜா ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய குணசீலன் வாலாஜா கோட்ட கலால் அலுவலராகவும், அந்த பொறுப்பில் பணியாற்றி வரும் பாஸ்கர் அரக்கோணம் நத்தம் நிலவரித்திட்ட தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வரும் ராஜேஷ் பேரணாம்பட்டு தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல அணைக்கட்டு மண்டல துணை தாசில்தாராக பணியாற்றி வரும் கோபாலகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தலைமை உதவியாளராக பணியாற்றி வரும் சிவப்பிரகாஷம் ஆகியோர் பெங்களூரு- சென்னை விரைவுப்பாதை தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் தனி தாசில்தார் பணியிடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி திருப்பத்தூர் நத்தம் நிலவரித்திட்ட தனி தாசில்தாராகவும், காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ரவி, வாலாஜா சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், வாணியம்பாடி தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியாற்றி வரும் சுமதி திருப்பத்தூர் கோட்ட கலால் அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு-சென்னை விரைவுபாதை தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகத்தில் தனி தாசில்தாராக பணியாற்றி வரும் சுஜாதா அணைக்கட்டு தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வரும் குமார் நாட்டறம்பள்ளி தாசில்தாராகவும், பேரணாம்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் ரமாநந்தினி, குடியாத்தம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணியாற்றி வரும் சுமதி ஆற்காடு தாசில்தாராகவும், ஆற்காட்டில் பணியாற்றி வரும் சரவணன் வேலூர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், அங்கு பணியாற்றி வரும் நெடுமாறன் குடியாத்தம் நகர நிலவரித்திட்ட தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன் பிறப்பித்துள்ளார்.



Next Story