‘நடவடிக்கை எடுக்காவிட்டால் சேலை கட்டி வரவேண்டும்’ என்று “அதிகாரிகளை கண்டித்ததில் உள்நோக்கம் கிடையாது” - கலெக்டர் பிரபாகர் வருத்தம்
‘நடவடிக்கை எடுக்காவிட்டால் சேலை கட்டி வரவேண்டும்’ என்று அதிகாரிகளை கண்டித்ததில் உள்நோக்கம் கிடையாது என கலெக்டர் பிரபாகர் வருத்தம் தெரிவித்தார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வேளாண்மை குறைதீர்க்கும்நாள் கூட்டம் கடந்த மாதம் 29-ந் தேதி நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயி ஒருவர், “வைரமங்கலம் கிளை வாய்க்காலின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று புகார் தெரிவித்தார். இதில் கோபம் அடைந்த கலெக்டர் எஸ்.பிரபாகர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கண்டித்தார். அப்போது அவர், “உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் சேலை கட்டித்தான் வரவேண்டும்”, என்று கூறினார்.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வருத்தம் தெரிவித்து நேற்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வேளாண்மை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குறையை தீர்த்து வைக்க அரசு அதிகாரிகள் அதிக காலதாமதம் ஏற்படுத்துவதாக விவசாயி ஒருவர் தெரிவித்தார். அதற்கு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், அடுத்த கூட்டம் நடப்பதற்கு முன்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினேன். அப்போது வேலை செய்யாவிட்டால் அதிகாரிகள் சேலை கட்டி வரவேண்டும் என்று பேசியதில் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது.
இது, விவசாயிகளின் குறையை அதிகாரிகள் சரியாக தீர்க்காமல் உள்ளார்களே என்ற ஆதங்கத்தில் தவறுதலாக கூறப்பட்டது. இந்த செயலுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நேரடியாக வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற செயல்கள் வருங்காலத்தில் நிகழாமல் தவிர்க்கப்படும். மேலும், இதனால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் அவர்களுக்கும் நான் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story