மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆகஸ்டு 9-ந் தேதி பிரசாரம் + "||" + On August 9th, the whole of Tiruvarur district is urging all the demands

கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆகஸ்டு 9-ந் தேதி பிரசாரம்

கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆகஸ்டு 9-ந் தேதி பிரசாரம்
கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆகஸ்டு 9-ந் தேதி பிரசாரம் நடத்துவது என்று, ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருவாரூர்,

திருவாரூரில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் கலந்து கொண்டு பேசினார்.


கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ரேஷனில் அத்தியாவசிய பொருட்கள் குறைக்கப்படாமல் மக்களின் தேவைக்கேற்ப வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி, டாஸ்மாக் போன்ற துறைகளில் மதிப்பூதியம், தொகுப்பூதியம் முறைகளை கைவிட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர் நல வாரிய பணப்பயன்களை இரட்டிப்பாக்க வேண்டும். அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். புதிய வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி திருவாரூர் மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட நிர்வாகிகள் கவுதமன், கலைச்செல்வன், காந்தி, சின்னத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.