ரூ.44 கோடியே 62 லட்சத்தில் வளவனாற்றை மேம்படுத்தும் பணி கலெக்டர் ஆய்வு
திருத்துறைப்பூண்டி அருகே சிங்களாந்தியில் ரூ.44 கோடியே 62 லட்சம் மதிப்பில் வளவனாற்றை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் நிர்மல்ராஜ் ஆய்வு செய்தார்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சிங்களாந்தி கிராமத்தில் ரூ.44 கோடியே 62 லட்சத்தில் வளவனாறு மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகள் முன்னேற்றம் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்தும் செயற் பொறியாளரிடம் கேட்டறிந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்துக்கு உட்பட்ட வளவனாற்றில் ரூ.44 கோடியே 62 லட்சத்தில் கரைகள், வடிகால் மதகுகள் புனரமைத்தல், கடைமடை அணைகள் புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி 19.300 கி.மீட்டர் அளவிற்கு கரைகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் கடைமடை அணை அமைக்கும் பணி, பிச்சன்கோட்டகம் வடிகால் கடைமடை அணை அமைக்கும் பணி, 20 வடிகால் மதகு அமைக்கும் பணிகள், 8 மதகுகள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. மேலும் திருத்துறைப்பூண்டி முதல் துளசியாபட்டினம் வரை 14.300 கி.மீட்டர் அளவுக்கு கரையோர தார்சாலை அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டைசெல்வன், வேளாண்மை இணை இயக்குனர் சந்துரு, தாசில்தார் மகேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story