1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் சீருடை மாற்றம் கொண்டு வரப்படும் எடப்பாடி பழனிசாமி பேச்சு
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பள்ளி சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலையரங்கம், கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் வரவேற்றார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு கலையரங்கம் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்து பேசியதாவது:-
புதிதாக ஒரு பள்ளியை திறந்தால் குறைந்தது 10 சிறைச்சாலைகளை மூட வேண்டி இருக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அதிக பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனால் தான் குற்றங்கள் மிக குறைவாக உள்ள மாநிலமாகவும், அமைதி பூங்காவாகவும் தமிழகம் திகழ்கிறது. அந்த பெருமைக்கு முழு காரணம் பள்ளிகளும், சேவை உணர்வு மிக்க ஆசிரியர்களும் தான்.
மாணவர்கள் வரும் காலத்தில் அறிவியல் மேதையாகவும், அரசியல் தலைவராகவும், கலெக்டராகவும், உயர் அலுவலர்களாகவும், நீதிபதிகளாகவும் ஆசிரியர்களாகவும் உயரலாம். வகுப்பறையில் கற்றுக் கொடுக்கிற ஆசிரியரை விட, கற்றலைத் தூண்டுகின்ற ஆசிரியரை விட, ஒரு மாணவனின் சுய சிந்தனையை தட்டி எழுப்புகிற, சுடர்விட்டு மிளிர செய்கின்ற ஆசிரியரைத் தான் இன்றைய சமுதாயம் வரவேற்கிறது.
ஆகவே கற்றல், கற்பித்தல் நிகழ்வுகளையும் தாண்டி சுய சிந்தனையை வளர்தெடுக்கும் கல்விதான் இன்றைக்கு நமக்குத் தேவை. அத்தகைய கல்வி முறையை உள்ளடக்கித்தான், இன்றைய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு அரசுப்பள்ளி, தனியார் பள்ளி வித்தியாசம் காணமுடியாத அளவிற்கு அரசுப்பள்ளிகளின் தரமும், தோற்றமும் மாறியுள்ளது என்றால், அதற்கு வித்திட்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்.
இன்றைக்கு அரசுப்பள்ளிகளின் கற்றல், கற்பித்தல் முறையில் மிகப்பெரிய மாற்றமும், மறுமலர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வகுத்துக் கொடுத்த கல்வித் திட்டங்கள் தான் இந்த மறுமலர்ச்சிக்கு காரணம் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். தமிழக அரசு அனைவருக்கும் தரமான கல்வியை அளிப்பதற்கு உறுதி பூண்டுள்ளது. 2018-19-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், பள்ளிக் கல்வித்துறைக்கு மிக அதிக அளவு ஒதுக்கீடாக ரூ. 27 ஆயிரத்து 205 கோடியே 88 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதே இதற்கு சான்றாகும்.
2017-18-ம் கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 20 லட்சம் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 2 நிமிடத்தில் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டது. வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 3 ஆயிரத்து 90 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 2 ஆயிரத்து 939 மேல்நிலைப்பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப கணினி ஆய்வகங்கள் ரூ.438 கோடியில் ஏற்படுத்தப்பட உள்ளது. பள்ளிக் கல்வித் துறை, தமிழகமெங்கும் 11 இடங்களில் போட்டித் தேர்வுகளுக்காக, உண்டு உறைவிட பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது.
தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொடர் முயற்சிகளின் பயனாக, தொடக்க நிலை வகுப்புகளில் 2011-12-ம் ஆண்டில் 99.63 நிகர சேர்க்கை விகிதம் 2017-18-ல் 99.86 ஆக உயர்ந்தது. உயர் தொடக்க நிலை வகுப்புகளில் 2011-12-ம் ஆண்டில் 98.88 ஆக இருந்த நிகர சேர்க்கை விகிதம் 2017-18-ல் 99.22 ஆக உயர்ந்துள்ளது. இடைநின்றல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை, சீருடை மாற்றம் கொண்டு வரப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த தருணத்தில் தெரிவித்து, இப்பொழுது தனியார் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு இணையாக நம்முடைய மாணவ செல்வங்கள் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த சீருடை மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறோம். அதே போல், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை, அணிகின்ற அந்த மாணவ, மாணவிகளுடைய சீருடை அனைவரும் பாராட்டுதலுக்குரிய சீருடையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story