இரணியலில் ரெயில் மறியல் செய்ய முயற்சி: மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் 30 பேர் கைது
இரணியலில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
அழகியமண்டபம்,
திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சி செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், நாகர்கோவிலில் இருந்து மங்களூர் செல்லும் ஏர்நாட் எக்ஸ்பிரஸ் ஆகியவை இரணியல் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம், மறியல் என பல கட்ட போராட்டம் நடத்தினர். ஆனால், ரெயில்கள் நின்று செல்ல இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் அந்த ரெயில்கள் இரணியலில் நின்று செல்ல வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று இரணியல் ரெயில் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
நேற்று மாலை 3 மணியளவில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து தலைமையில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் ரெயில் நிலையம் அருகே கூடினர். தொடர்ந்து, அவர்கள் கோஷமிட்டவாறு மறியல் செய்ய ஊர்வலமாக புறப்பட்டு ரெயில்நிலையத்தின் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Tags :
Next Story