குழந்தை கடத்தல் கும்பல் என்று நினைத்து வடமாநில வாலிபர்கள் மீது பயங்கர தாக்குதல்
குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்று நினைத்து சென்னை தேனாம்பேட்டையில் வடமாநில வாலிபர்கள் இருவரை பொதுமக்கள் பயங்கரமாக தாக்குதல் நடத்தி காயப்படுத்திவிட்டனர்.
சென்னை,

தமிழகம் முழுவதும் குழந்தை கடத்தல் பீதி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சந்தேகத்தின் பேரில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்று சந்தேக நபர்களை பொதுமக்கள் அடித்து உதைத்துவிடுகிறார்கள். சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண் ஒருவர்கூட அடித்து கொலை செய்யப்பட்டார்.
குறிப்பாக வடமாநில வாலிபர்களை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என்று நினைத்து பொதுமக்கள் தாக்குதல் நடத்துகிறார்கள். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் பரவி இருந்த இந்த சந்தேகத்தீயானது தற்போது சென்னையிலும் பரவ தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு சென்னை தேனாம்பேட்டையில் இதுபோன்ற தாக்குதல் சம்பவம் அரங்கேறிவிட்டது.
தேனாம்பேட்டை காமராஜர் நகரை சேர்ந்தவர் வடிவேல் ஈஸ்வரன். இவரது மனைவி வரலட்சுமி. இவர்களது மகன் அவினாஷ் (வயது 4). நேற்று முன்தினம் இரவு வரலட்சுமி தனது வீட்டின் அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அவருக்கு பின்னால் மகன் அவினாசும் சென்றான். அவினாஷ் தன் பின்னால் வருவதை கவனிக்காமல் வரலட்சுமி வேகமாக நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் நடந்து வந்தனர். அவர்களில் ஒருவர் சிறுவன் அவினாசை தூக்கி கொஞ்சினார். இதை அந்த வழியாக சென்ற செல்வராஜ் என்பவர் பார்த்தார். அவினாசை கொஞ்சிய ஒடிசா வாலிபரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்று செல்வராஜ் கருதினார். உடனே கூச்சல் போட்டு அக்கம் பக்கத்தினரை வரவழைத்தார்.
பொதுமக்கள் ஏராளமான பேர் திரண்டு வந்தனர். இதை பார்த்ததும் சிறுவன் அவினாசை கொஞ்சிய ஒடிசா மாநில வாலிபர் ஓட்டம் பிடித்தார். அவருடன் வந்த மற்ற 4 வாலிபர்களும் பொதுமக்களை பார்த்து தப்பி ஓடினர். பொதுமக்கள் விரட்டி சென்று அவினாசை கொஞ்சிய வாலிபரையும், இன்னொரு வாலிபரையும் மடக்கி பிடித்தனர். அவர்கள் இருவர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
அடி தாங்காமல் வாலிபர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சுருண்டு கீழே சாய்ந்தனர். இதுபற்றி தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் போலீஸ் படையோடு விரைந்து வந்து பொதுமக்களிடம் சிக்கி தவித்த ஒடிசா மாநில வாலிபர்கள் இருவரையும் மீட்டனர்.
அவர்கள் இருவரையும் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரை பார்த்ததும் ஒடிசா மாநில வாலிபர்கள் மீது தாக்குதல் நடத்திய பொதுமக்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். தாக்குதலில் காயமடைந்த வாலிபர்கள் பெயர் கோபால்சாகு (25), பினோத்விஹாரி (22) என்று தெரியவந்தது. அவர்கள் இருவரும் சென்னை அண்ணாநகரில் செயல்படும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வேலை செய்பவர்கள் ஆவார்கள். காயமடைந்த ஒடிசா வாலிபர் கோபால்சாகு சிறுவன் அவினாஷ் வீட்டின் அருகே தன் நண்பர்களோடு வாடகை வீட்டில் வசிக்கிறார்.
சிறுவன் அவினாசுடன் அவர் அன்பாக பழகி வந்தார். அந்த பழக்கத்தில்தான் அவினாசை தூக்கி அவர் கொஞ்சி இருக்கிறார். இந்த விஷயம் தெரியாமல் செல்வராஜ் என்பவர் கூச்சல்போட பொதுமக்களும் திரண்டு வந்து அடித்து துவைத்துவிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குழந்தை கடத்தல் கும்பல் என்று யார் மீதாவது சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்குத்தான் தகவல் கொடுக்க வேண்டும் என்றும், யார் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story