பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம்: முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது


பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம்: முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 2 July 2018 5:00 AM IST (Updated: 2 July 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்றுக்காலை சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினெட் அறையில் நடந்தது.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போது நிதிப்பொறுப்பினை வகிக்கும் முதல்–அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்றுக்காலை சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினெட் அறையில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், வளர்ச்சித்துறை ஆணையர் அன்பரசு மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.


Next Story