தாய் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் காதலித்த பெண்ணை ஏற்றுக்கொள்ள மறுத்த வாலிபர்
தாய் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் காதலித்த பெண்ணை வாலிபர் ஏற்க மறுத்தார். போலீசார் சமரசம் பேசி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
திருவெறும்பூர்,
புதுக்கோட்டை மாவட்டம் திம்மையம்பட்டியை சேர்ந்தவர் ராஜூ. இவருடைய மகன் சிவக்குமார். இவர் நவல்பட்டு அருகே திருவளர்ச்சிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்தபோது, இவருக்கும் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியை சேர்ந்த இளங்கோ மகள் பிரியதர்ஷினிக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
அவர்களுடைய காதலை சிவக்குமாரின் தாயார் சந்திரா ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து இருகுடும்பத்தினரும் சமரசம் பேசி, நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிவக்குமாருக்கும், பிரியதர்ஷினிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து இருவீட்டாரும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து திருமணத்திற்கு அழைத்தனர்.
இந்நிலையில் சிவக்குமாரின் தாய் சந்திரா, இந்த திருமணம் நடந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் நேற்று முன்தினம் இரவு சிவக்குமார், பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டு, புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சென்று விட்டார்.
இந்த சம்பவம் குறித்து பிரியதர்ஷினி நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் நேற்று நவல்பட்டு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார், சிவக்குமாரை அழைத்து வந்து நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் சிவக்குமார் பிரியதர்ஷினியை திருமணம் செய்து கொள்ள ஒத்துக்கொண்டதின் அடிப்படையில் போலீஸ் நிலையத்தில் வைத்து சிவக்குமாருக்கும், பிரியதர்ஷினிக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டதோடு இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு உறவினர்களோடு அவர்களை அனுப்பி வைத்தனர்.

Related Tags :
Next Story