சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொது மக்கள் அவதி
சேலத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொது மக்கள் அவதிப்பட்டனர்.
சேலம்,
சேலம் மாநகர் பகுதி முழுவதும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் நல்ல வெயில் அடித்தது. இந்நிலையில் இரவு 9.20 மணிக்கு லேசான மழை பெய்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது.
இதனால் மாநகர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக 4 ரோடு, பெரமனூர், நாராயண நகர் 20 அடிரோடு, தமிழ்சங்கம் ரோடு, சங்கர் நகர் மெயின் ரோடு மற்றும் கிச்சிப்பாளையம், ஜான்சன்பேட்டை, ராமகிருஷ்ணா ரோடு, சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை உள்ளிட்ட மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் அதிக அளவு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வீட்டை விட்டு வெளியில் வந்தவர்கள் வீடுகளுக்குள் செல்ல முடியாமல் தவித்தனர். பின்னர் நள்ளிரவு மழைநீர் வடிந்ததும் வீடுகளுக்கு சென்றனர்.
மேலும் கிச்சிபாளையம் மற்றும் தமிழ்சங்கம் சாலை பகுதிகளில் உள்ள வீடுகளில் சாக்கடை கழிவு நீருடன், மழைநீர் புகுந்தது. இதனால் அங்கு வசித்த பொது மக்கள் வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு இடங்களுக்கு சென்று தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். சிலர் தங்களது வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை பாத்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் ஏராளமானவர்கள் தங்கள் குடும்பத்துடன் பூங்கா, சினிமா போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கு வந்தனர். இரவு பெய்த பலத்த மழையால் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் நடுவழியில் தவித்தனர். மழை விடாததால் வெகு நேரம் காத்து இருந்தவர்கள் பின்னர் மழையில் நனைந்தபடி சென்றனர்.

Related Tags :
Next Story