8 வழி பசுமை சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி அதியமான் அரண்மனை கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவி சிற்றரசு தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ரெயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த பாலத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதியமான்கோட்டை முதல் ஒசூர் வரை அமைக்கப்பட உள்ள நான்குவழி சாலை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த பொதுமக்களிடம் முறையாக கருத்து கேட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத வகையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
பாப்பாரப்பட்டியில் பாரத மாதா ஆலயம் அமைக்கப்படும் என்றும், நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடபடும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, வருகிற 15-ந் தேதி காமராஜர் பிறந்த நாள் விழாவை தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும். சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்து விட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் சேலம், தர்மபுரி, வாணியம்பாடி வழியாக செல்லும் சாலையை 8 வழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் கிராமப்புறங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெறாமல் தேக்கம் அடைந்துள்ளது. எனவே உள்ளாட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் வட்டார தலைவர்கள் கனகராஜ், குப்பன், சரவணன், காமராஜ், பிரகாசம், வஜ்ஜிரம், சண்முகம், சுபாஷ், ஜனகராஜ், வேலன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட நிர்வாகி கக்கன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story