ஆத்தூர் காமராஜர் அணையில் குளித்தபோது நீரில் மூழ்கி டிரைவர் பலி
ஆத்தூர் காமராஜர் அணையில் குளித்தபோது, நீரில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
செம்பட்டி,
ஆத்தூர் காமராஜர் அணையில் குளித்தபோது, நீரில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன் (வயது 39). இவருடைய நண்பர்கள் முத்துப்பாண்டி (35), தீபக் (37), சுப்பிரமணி, மணி, குணசேகரன், முபாரக். இவர்கள் 7 பேரும் டிரைவர்கள். நேற்று முன்தினம் இவர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தங்களது நண்பரை பார்க்க காரில் வந்துள்ளனர். பின்னர் மாலையில் 7 பேரும் கொடைக்கானலுக்கு திரும்பி செல்லும் வழியில் ஆத்தூர் காமராஜர் அணைக்கு சென்றுள்ளனர்.
இதையடுத்து அணையில் அனைவரும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அணையின் ஆழமான பகுதிக்கு முருகன் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் நீரில் மூழ்க தொடங்கியுள்ளார். இதைக்கண்ட அவரின் நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கரைப்பகுதிக்கு வந்து அக்கம்பக்கத்தினரிடம் நடந்ததை கூறி உதவிக்கு அழைத்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கு வந்தனர். இதற்கிடையே முருகன் நீரில் மூழ்கினார்.
பின்னர் சம்பவம் குறித்து செம்பட்டி போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்து, அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவாகியதால் பணியை தொடர முடியவில்லை.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அணையில் முருகனின் உடல் மிதந்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் முருகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அணைக்கு குளிக்க வருபவர்கள், மூழ்கி உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. எனவே காவலாளியை நியமனம் செய்து, அணையில் குளிக்க தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story