கும்பகோணம் அருகே பரிதாபம்: அரசு பஸ்-மொபட் மோதல்; கணவன்-மனைவி பலி
கும்பகோணம் அருகே அரசு பஸ்சும், மொபட்டும் மோதிக்கொண்டதில் கணவனும், மனைவியும் பரிதாபமாக இறந்தனர்.
திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் விடையல்கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரமவுலி(வயது 58). இவருடைய மனைவி வசந்தி(54). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று மாலை சந்திரமவுலி தனது மனைவி வசந்தியுடன் மொபட்டில் கும்பகோணம் சென்றார். அங்கு பொருட்கள் வாங்கி விட்டு இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.
வழியில் கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டை பெரியார் நகருக்கு சென்ற அவர்கள், அங்கு ஒருவரை சந்தித்து விட்டு ஊருக்கு செல்வதற்காக கும்பகோணம்-மன்னார்குடி மெயின் சாலைக்கு வந்தனர். அப்போது மன்னார்குடியில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், மொபட் மீது மோதியது.
இந்த விபத்தில் சந்திரமவுலியும், வசந்தியும் படுகாயம் அடைந்தனர். வசந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சந்திரமவுலியை அக்கம், பக்கத்தினர் மீட்டு கும்ப கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்திரமவுலி பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து நாச்சியார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகவுரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story