ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை தூர்வார வேண்டும், தாந்தநாடு கிராம மக்கள் மனு
ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை தூர்வார வேண்டும் என்று தாந்தநாடு கிராம மக்கள் மனு அளித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். அதன்படி, கோத்தகிரி அருகே தாந்தநாடு கிராம மக்கள் கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தாந்தநாடு கிராமத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் தண்ணீர் உற்பத்தியாகி கூக்கல்தொரை செல்கிறது. தாந்தநாடு கிராமம் மட்டுமல்லாமல், அருகில் உள்ள கிராமங்களான அணையட்டி, திம்பட்டி பகுதிகளுக்கும் நீர் ஆதாரமாக உள்ளது. கால்வாயை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். மீதமுள்ள பகுதி புதர் மண்டி தூர்வாராமல் காணப்படுகிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இதே நிலை நீடித்தால் கால்வாய் முற்றிலும் அழிந்து போகும் நிலை உருவாகும்.
கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த நிலையில் தற்போது கால்வாயையொட்டி தனியார் விடுதிகளுக்கு தண்ணீர் எடுப்பதற்காக கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன் காரணமாக பொதுமக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே, குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்வதோடு, கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நீலகிரி தொகுதி மக்கள் இயக்க தலைவர் ராஜ் கொடுத்த மனுவில், கூடலூர் நகராட்சியில் ரூ.1½ கோடி மதிப்பில் வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒப்பந்தபுள்ளிக்கான (டெண்டர்) விண்ணப்பம் மற்றும் டெண்டர் விடுவதில் முறைகேடு நடப்பதாக கடந்த மாதம் 4-ந் தேதி மாவட்ட கலெக்டரிடமும், போலீஸ் சூப்பிரண்டிடமும் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் காரணமாக டெண்டர் விடுவது நிறுத்தப்பட்டது. தற்போது வளர்ச்சி பணிகள் தொடங்காமல் நிலுவையில் உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவதால், உடனடியாக நேர்மையான முறையில் டெண்டர் விட்டு பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
கூடலூர் அருகே மரப்பாலம் பகுதியை சேர்ந்த சிவராஜ் அளித்த மனுவில், மரப்பாலம்-கூடலூர் சாலையை ஒட்டி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தையும், அரசுக்கு சொந்தமான இடத்தையும் சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி உள்ளதாக கூடலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு இருந்தேன். இதுகுறித்து கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும்படி எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நான் கடந்த 29-ந் தேதி அலுவலகத்திற்கு சென்ற போது, பணியில் இருந்த அலுவலர் ஒருவர் என்னிடத்தில் தவறாக பேசி அவமதித்து விட்டார். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரி மீது மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 257 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story