விருதுநகர், சாத்தூரில் ரெயில் மறியலுக்கு முயன்ற 260 பேர் கைது


விருதுநகர், சாத்தூரில் ரெயில் மறியலுக்கு முயன்ற 260 பேர் கைது
x
தினத்தந்தி 3 July 2018 5:43 AM IST (Updated: 3 July 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர், சாத்தூரில் ரெயில் மறியலுக்கு முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 260 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்,

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை சட்டம் நீர்த்து போகும் வகையில் தீர்ப்பு வெளியானதை கண்டித்தும், மத்திய அரசு இச்சட்டத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விருதுநகர், சாத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தமிழ் புலிகள், ஆதிதமிழர், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயற்சித்தனர். விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் தலைமையில் ரெயில் மறியலுக்கு முயன்ற 35 பெண்கள் உள்பட 165 பேரை போலீசார் கைதுசெய்தனர். இதேபோல் சாத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் தலைமையில் ரெயில் மறியலுக்கு வந்த 18 பெண்கள் உள்பட 95 பேர் கைது செய்யப்பட்டனர். 

Related Tags :
Next Story