சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்வேன் என்று மிரட்டிய வாலிபரால் பரபரப்பு
கலெக்டர் அலுவலகத்தில், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
மனு கொடுக்க வந்தவர்களை போலீசார், கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் தடுத்து நிறுத்தி பலத்த சோதனைக்கு பிறகே கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுப்பினர். அவ்வாறு சோதனை செய்து கொண்டிருந்தபோது வரிசையில் நின்று கொண்டிருந்த வாலிபர் திடீரென்று, நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன், நான் சாகப்போகிறேன், என்று மிரட்டினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை போலீசார் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ஆனந்த் (வயது 26) என்று தெரியவந்தது.
இது குறித்து அவர் கூறும் போது, நான் தற்போது தெரு, தெருவாக ராட்டினம் சுற்றும் வேலை செய்து வருகிறேன். எனக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஆதார் அட்டை எடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு பலமுறை வந்த என்னை போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர். காரணம் கேட்டால் ஏற்கனவே உன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மீறி பேசினால் மேலும் வழக்கு போடுவோம், என்று கூறி மிரட்டுகின்றனர். எனவே ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் நான் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே தற்கொலை செய்து கொள்வேன், என்று கூறினார்.
சிறிது நேரத்திற்கு பிறகு அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story