எடப்பாடி அருகே மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி, கட்டிட தொழிலாளிபலி


எடப்பாடி அருகே மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதி, கட்டிட தொழிலாளிபலி
x
தினத்தந்தி 3 July 2018 5:48 AM IST (Updated: 3 July 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி அருகே மொபட் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார்.

எடப்பாடி,

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த மாத்தனூரைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 38). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை எடப்பாடி பூலாம்பட்டி ரோட்டில் கள்ளுக்கடை அருகே உள்ள ஒரு மளிகை கடைக்கு மொபட்டில் சென்றார். அங்கு பொருட்கள் வாங்கினார். அதனை தனது மொபட்டில் வைத்தார்.

பின்னர் மொபட்டில் புறப்படுவதற்காக திருப்பினார். அப்போது எடப்பாடியில் இருந்து மேட்டூர் நோக்கி மோட்டார்சைக்கிளில் கொளத்தூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரசாந்த்குமார், அவருடைய நண்பர் அகிலன் (29) ஆகியோர் சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் பழனிசாமி படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை எடப்பாடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியில் பழனிசாமி இறந்தார்.இந்த விபத்து குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story