மாத சம்பளத்தை வழங்காமல் இழுத்தடிப்பதாக பேரூராட்சி பெண் துப்புரவு பணியாளர்கள் குற்றச்சாட்டு
பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் மாத சம்பளத்தை வழங்காமல் இழுத்தடிப்பதாக குற்றம் சாட்டியும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் கலெக்டரிடம் பெண் துப்புரவு பணியாளர்கள் மனு கொடுத்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 231 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவின் சார்பில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வரும் பெண்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், கடந்த 5 ஆண்டுகளாக துப்புரவு பணியாளர்களாக வேலை செய்து வரும் எங்களுக்கு ரூ.5 ஆயிரம் தான் மாத சம்பளமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மே மாதம் முதல் ரூ.7,050 சம்பளம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும் அதில் ரூ.1,000-ஐ பிடித்தம் செய்வோம் என அதிகாரி ஒருவர் வாய்மொழியாக கூறினார். எனினும் அதனை கொடுக்க நாங்கள் முன்வரவில்லை. இதனால் எங்களுக்கு வங்கி கணக்கில் இருந்து சம்பளத்தை எடுத்து தராமல் இழுத்தடித்து அலைக்கழிப்பு செய்கின்றனர். வேலையை விட்டு நீக்கிவிடுவதாக மிரட்டலும் விடுக்கின்றனர். இதனால் மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு தடையின்றி சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வேலை செய்யும் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் அவரது பெயரில் சம்பள பணத்தை நேரடியாக பேரூராட்சி நிர்வாகம் செலுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மண்மங்கலம் வட்டம் அரங்கநாதம்பேட்டை அருகே அச்சமாபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதி மக்கள் சிலரது ஸ்மார்ட் கார்டுகளை, நியாய விலைக்கடையின் எந்திரத்தில் பதிவு செய்யும் போது விவரங்கள் சரிவர காண்பிக்கப்படாததால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத சூழல் உள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம். மேலும் தற்போது ஸ்மார்ட் கார்டு அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் வேறு கார்டு வழங்க இயலாது என அதிகாரிகள் கூறுகின்றனர். இதுபோல் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றையும் அந்த ஸமார்ட் கார்டில் மேற்கொள்ள முடிவதில்லை. எனவே எங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கிருஷ்ணராயபுரம் வட்டம் லாலாப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜன் அளித்த மனுவில், லாலாப்பேட்டை கூட்டுறவு இ-சேவை மையத்தில் வருமானம், இருப்பிடம், சாதிசான்றிதழ் உள்ளிட்டவற்றிற்கு பதிவு செய்து கொடுக்க காலதாமதம் செய்து அலைகழிக்கின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
கரூர் மாவட்ட சமநீதி சட்ட விழிப்புணர்வு இயக்கத்தை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலை பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 3 மாதங்களில் ரூ.1 கோடி வரை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் மோசடி செய்து வருகின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் ஏழை முதல் கோடீஸ்வரர்கள் வரை இந்த அறக்கட்டளைக்கு பணம் செலுத்தியுள்ளனர். பின்னர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததும் வேறு வழிதெரியாமல் முதலீடு பணம் திரும்ப கிடைக்குமா? என மன உளைச்சலில் உள்ளனர். சமீபத்தில் கரூரில் அரசு ஊழியர் ஒருவர் தனது நண்பர்கள் உள்ளிட்டோரையும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய சேர்த்து விட்டதால் பண நெருக்கடிக்கு ஆளாகி உயிரிழந்தார். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டு தர வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மேலும் இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு இலவச கியாஸ் இணைப்பையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், ஒரு பயனாளிக்கு முழங்கை ஊன்றுகோல் என மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.59,200 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். பின்னர் கரூர் மாவட்ட தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பாலசுப்பிரமணியன் 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய போது கொடி நாள் வசூலில் அதிக வசூல் புரிந்தமைக்காக சான்றிதழ், வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி குமரேசன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி காமாட்சி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story