அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டனர் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு


அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டனர் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
x
தினத்தந்தி 3 July 2018 6:06 AM IST (Updated: 3 July 2018 6:06 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.விற்கு துரோகம் செய்தவர்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டனர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட விளக்க கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்ராஜூ கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசும் போது கூறியதாவது;-

காவிரி மீட்பு குறித்து பொதுக்கூட்டம் நடத்தவும், பேசவும் அ.தி.மு.க.விற்கு மட்டும் தான் தகுதி உண்டு. மற்றவர்களுக்கு கிடையாது. ஸ்டெர்லைட் பிரச்சினை உண்மை நிலை குறித்து மீனவ மக்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். அ.தி.மு.க.வை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். கைநீட்டுபவர் வெற்றி பெறுவார். ஜெயலலிதா கை நீட்டுபவர்களுக்கு மக்கள் வாக்களித்தனர். இதுதான் வரலாறு. இதனை தெரியாமல் சிலர் பேசி வருகிறார்கள். என்னை பற்றி பேசினால் பொறுத்துக்கொள்வேன். என் தொண்டர்களை பற்றி பேசினால் தக்க பதிலடி கொடுப்பேன்.

அ.தி.மு.க.விற்கு என்றும் அழிவு கிடையாது. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் யாரும் உருப்பட்டது கிடையாது. ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்கள் உலகில் வாழ முடியாது. இந்த ஆட்சி 2021 வரை முழுமையாக நடைபெறும். அடுத்த தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். ஜெயலலிதாவிற்கு முன்பும், பின்னரும் அ.தி.மு.க.விற்கு துரோகம் செய்தவர்கள் அடையாளம் தெரியாமல் காணாமல் போய்விட்டனர். தமிழ் மக்களுக்கு இந்த இயக்கம் சேவை செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், ஊராட்சி செயலாளர் ரமேஷ், அமைப்பு சாரா ஓட்டுனர் ஒன்றிய துணை செயலாளர் செண்பகமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கயத்தாறு அருகே சவலாப்பேரி நாற்கர சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் செலவில் பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, பஸ் நிறுத்த நிழற்குடையை திறந்து வைத்தார்.

கோவில்பட்டி உதவி கலெக் டர் விஜயா, கயத்தாறு தாசில்தார் லிங்கராஜ், யூனியன் ஆணையாளர்கள் சீனிவாசன், முத்துகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story