காஞ்சீபுரம் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது


காஞ்சீபுரம் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 July 2018 6:39 AM IST (Updated: 3 July 2018 6:39 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே சிறுமியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம்,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் வினோத் (வயது 22). இவர் காஞ்சீபுரம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரும், அதே கம்பெனியில் வேலை செய்து வந்த காஞ்சீபுரம் அருகே காட்டுப்பட்டுரை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவரும் மாயமானார்கள். இதுபற்றி சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் வினோத், அந்த சிறுமியுடன் சத்தியவேடு அருகே உள்ள உறவினர் வீட்டில் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார், சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமியை கடத்தியதாக வினோத்தை கைது செய்தனர்.

Next Story