உணவு பாதுகாப்பு துறையின் வழிகாட்டுதல் குழு கூட்டம் - மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
காஞ்சீபுரத்தில் உணவு பாதுகாப்பு துறையின் வழிகாட்டுதல் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது.
காஞ்சீபுரம்,
தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில், காஞ்சீபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு துறையின் வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை தாங்கினார். பின்னர் அவர், பேசியதாவது:-
உணவு பாதுகாப்பு துறையின் உத்தேச உணவு வணிகர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 64 என்ற அளவில் தற்போது, 7 ஆயிரத்து 732 உணவு வணிகர்களுக்கு உரிமமும், 21 ஆயிரத்து 824 உணவு வணிகர்களுக்கு பதிவுச்சான்றும் என மொத்தம் 29 ஆயிரத்து 556 சான்றுகள் வழங்கப்பட்டு, அதற்கு கட்டணமாக ரூ.1 கோடியே 76 லட்சத்து 46 ஆயிரத்து 400 வருவாய் பெறப்பட்டு உள்ளது.
பாதுகாப்பற்ற, தரம் குறைந்த மற்றும் தவறான விவரச்சீட்டுடன் கூடிய உணவுப் பொருட்களை ஆய்வு செய்து, அதனடிப்படையில் அதனை தயாரித்த மற்றும் விற்பனை செய்த 80 உணவு வணிகர்கள் மீது நீதிமன்றம் மற்றும் மாவட்ட தீர்ப்பாயம் மூலமாக விசாரணை செய்து, அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.11 லட்சத்து 82 ஆயிரம் பெறப்பட்டது.
உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச்சான்றினை உணவு வணிகர்கள் கட்டாயம் இணைய தளம் மூலமாக விண்ணப்பித்து அதனை பதிவிறக்கம் செய்து, அதனை வணிகம் செய்யும் இடத்தில் பொதுமக்கள் பார்வையில்படும்படி வைக்க வேண்டும். அனைத்து உணவு வணிகர்களும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை அறவே தவிர்த்திடவேண்டும். தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கலப்பட உணவு பொருட்கள் மற்றும் உண்ண தகுதியற்ற சுகாதாரமற்ற உணவுப்பொருட்களை தங்கள் பகுதியில் உள்ள கடைகளில் கண்டறிந்தால் உணவு பாதுகாப்பு துறைக்கு 9444042322 என்ற ‘வாட்ஸ் அப்’ எண்ணில் புகார் தெரிவிக்க வேண்டும். வணிகர்கள் குறிப்பாக உணவகம் நடத்துபவர்கள் சமையல் நடைபெறும் இடங்களை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். வணிகர்கள் கலப்படமான பொருட்கள் என தெரியும் பட்சத்தில் அதனை விற்பனை செய்யக்கூடாது. அதனை தயாரிப்பவர்களிடம் இருந்து வாங்கவும் கூடாது.
முக்கியமாக சாலை ஓரங்களில் உள்ள உணவகங்களில் அவர்கள் உபயோகப்படுத்தும் தண்ணீர்் பாதுகாப்பானதாகவும், சுகாதாரமானதாகவும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை உபயோகப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பலகையை 300 உணவு வணிகர்களுக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகம்மது, துணை கலெக்டர்(பயிற்சி) சுரேந்திரன், முத்துகளுவன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story