குழந்தைகள் கடத்தல் பீதியில் ஒடிசா மாநில வாலிபர்களை தாக்கிய 4 பேர் கைது
வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை,
குழந்தைகள் கடத்தல் பீதியில் ஒடிசா மாநில வாலிபர்களை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக வதந்தியை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தைகள் கடத்தல் பீதி தமிழகம் முழுவதும், ஆங்காங்கே பரவி உள்ளது. வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக கடத்தல் பீதியை சில சமூக விரோதிகள் பரப்பி விடுகிறார்கள். வடமாநில வாலிபர்கள் குழந்தைகளை கடத்துகிறார்கள் என்று சந்தேகப்பட்டு பொதுமக்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது.
கடந்த சனிக்கிழமை அன்று இரவு, சென்னை தேனாம்பேட்டையில் குழந்தைகளை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை பொதுமக்கள் பயங்கரமாக தாக்குதல் நடத்திவிட்டனர். இதில் அந்த வாலிபர்கள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலைசெய்து வந்த அந்த வாலிபர்கள், காயத்துடன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். தேனாம்பேட்டை திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன், முருகன், சுமன், விஜயன் ஆகிய 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றி தியாகராயநகர் துணை கமிஷனர் அரவிந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
தியாகராயநகர் பகுதியில் சமீபத்தில் குழந்தைகள் கடத்தல் சம்பவம் எதுவும் நடக்கவில்லை. குழந்தைகள் கடத்தல் பீதியை வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
யார் மீதாவது சந்தேகம் இருந்தால் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு தான் தகவல் தெரிவிக்க வேண்டும். சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு தாக்குதலில் ஈடுபடக்கூடாது. தேனாம்பேட்டையில் நடந்த சம்பவத்தில் தக்க நேரத்தில் போலீசார் சென்றதால், தாக்கப்பட்ட ஒடிசா மாநில வாலிபர்கள் இருவரும் காப்பாற்றப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story