வரைவு பட்டியல் வெளியீடு: வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
நெல்லை மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளன.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், நெல்லை, அம்பை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் என 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மேற்கண்ட தொகுதிகளில் 2 ஆயிரத்து 931 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும். மேலும் ஒரு சில வாக்குச்சாவடிகள் தூரத்தில் இருப்பதாகவும் அதை மாற்றி அமைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது.
அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்து பிரித்தனர். மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டு உள்ளன. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி கூடுதலாக சேர்க்கப்பட்ட வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வெளியிட்டார். அதை அரசியல் கட்சி பிரதிநிதிகள் பெற்று கொண்டனர்.
இதுகுறித்து கலெக்டர் ஷில்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. நகர்புறங்களில் 1,400 பேருக்கு மேல், கிராமப்புறங்களில் 1,200 பேருக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில் கிராமப்புறத்தில் ஒரு வாக்குச்சாவடி கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.
கடையநல்லூர் சட்டசபை தொகுதியில் நகர்புறங்களில் 6 வாக்குச்சாவடியும், கிராமப்புறங்களில் ஒரு வாக்குச்சாவடியும், தென்காசி சட்டசபை தொகுதியில் நகர்புறங்களில் 5 வாக்குச்சாவடியும், கிராமப்புறங்களில் 3 வாக்குச்சாவடியும், ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் நகர்புறங்களில் 3 வாக்குச்சாவடியும் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது.
நெல்லை சட்டசபை தொகுதியில் நகர்புறங்களில் 2 வாக்குச்சாவடியும், கிராமப்புறத்தில் ஒரு வாக்குச்சாவடியும், அம்பை நகர்புறத்தில் ஒரு வாக்குச்சாவடியும், கிராமப்புறத்தில் 8 வாக்குச்சாவடியும், நாங்குநேரி சட்டசபை தொகுதியில் கிராமப்புறத்தில் 13 வாக்குச்சாவடியும், ராதாபுரத்தில் கிராமப்புறத்தில் 6 வாக்குச்சாவடியும் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளன. ஆக மொத்தம் 50 வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டு உள்ளன.
இதுதவிர சங்கரன்கோவில் தொகுதியில் 4 வாக்குச்சாவடி மையங்களும், வாசுதேவநல்லூர் தொகுதியில் 2 வாக்குச்சாவடியும், கடையநல்லூர் தொகுதியில் 2 வாக்குசாவடிகளும், தென்காசி தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. ஆலங்குளம் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியும், நாங்குநேரி தொகுதியில் 6 வாக்குச்சாவடியும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், வக்கீல் அணியை சேர்ந்த வி.டி.திருமலையப்பன், தி.மு.க.வை சேர்ந்த தினேஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சொக்கலிங்ககுமார், தே.மு.தி.க. சார்பில் ஜெயசந்திரன், ஆனந்தமணி, பாரதீய ஜனதா கட்சி சார்பில் சுரேஷ், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story