3-வது மாடியில் இருந்து கீழே தள்ளி முதியவர் கொலை - 2 பேர் கைது
மும்ராவில் 3-வது மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டு முதியவரை கொன்ற கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தானே,
தானே மும்ராவை சேர்ந்தவர் யூனுஸ் அலி செய்யது (வயது75). இவர் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் 3-வது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் அப்துல் காலித் என்பவர் அந்த பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை தவறான எண்ணத்துடன் தொட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்து ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் நேற்று முன்தினம் யூனுஸ் அலி செய்யதுவின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தனர்.
திடீரென அவர்கள் யூனுஸ் அலி செய்யதுவின் குடும்பத்தினரை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முதியவர் யூனுஸ் அலி செய்யது அவர்களை தடுக்க முயன்றார். அப்போது, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவரை பிடித்து கீழே தள்ளிவிட்டு உள்ளனர். இதில், அவர் மாடியின் கைப்பிடி சுவரில் மோதியதில் அந்த சுவர் இடிந்து மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
இதில், பலத்த காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மும்ரா போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் உறவினர்களான நிசார் அன்வர் சேக்(24), வாஷிம் அன்வர் சேக்(22) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Tags :
Next Story