பாந்திராவில் போலீஸ்காரரை தாக்கியதாக 3 வாலிபர்கள் கைது
பாந்திராவில் போலீஸ்காரரை தாக்கியதாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை,
மும்பை பாந்திரா, பி.கே.சி. ரோட்டில் வார இறுதி நாட்களில் வாலிபர்கள் மோட்டார் சைக்கிள், கார் பந்தயங்களில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் பி.கே.சி. ரோட்டில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை போலீசார் பி.கே.சி. ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது 3 வாலிபர்கள் ஒரே மோட்டார் சைக்கிள்களில் வேகமாக வந்து கொண்டு இருந்தனர்.
இதையடுத்து போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்துமாறு கூறினர். ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் ஒரு போலீஸ்காரர் மீது மோதுவது போல வந்து தப்பிச்செல்ல முயன்றனர். எனினும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து அந்த வாலிபர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ஒரு போலீஸ்காரரரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் ஒரு வாலிபர் அந்த பகுதியில் நின்று கொண்டு இருந்த காரில் தலையை மோதிவிட்டு போலீசார் தன்னை தாக்கியதாக கூச்சல் போட்டுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த 3 வாலிபர்களையும் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்களது பெயர் சல்மான்கான்(23), இஸ்தியாக் சேக்(25), சாகில் அன்சாரி(29) என்பது தெரியவந்தது. 3 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Tags :
Next Story