பள்ளிக்கூடத்தில் 6–ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு சரமாரி அடி–உதை
தக்கலை அருகே பள்ளிக்கூடத்தில் 6–ம் வகுப்பு மாணவிகள் 2 பேருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து மாணவிகளின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பத்மநாபபுரம்,
தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் வகுப்பறைகளில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த மாணவ–மாணவிகளின் புத்தகங்கள் மற்றும் செய்முறை பயிற்சி ஏடுகள் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும், பள்ளி கேண்டீனில் இருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே பள்ளிக்கூட ஆசிரியர் 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–
திருவிதாங்கோட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் குழிக்கோடு பகுதியை சேர்ந்த செல்லம் (வயது 55) என்பவர் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 6, 7–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு பாடம் எடுப்பது வழக்கம்.
இந்தநிலையில், செல்லம் கடந்த 29–ந் தேதி 6–ம் வகுப்பு மாணவிகள் 2 பேரிடம் மாலையில் சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறியுள்ளார். ஆசிரியர் கூறியபடி அந்த இரண்டு மாணவிகளும் வகுப்பு முடிந்து காத்திருந்தனர். அனைத்து மாணவ–மாணவிகளும் சென்ற பின்பு, செல்லம் இரண்டு மாணவிகளையும் ஒரு வகுப்பறைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அதன்பின்பு, இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மாணவிகளை மிரட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
வீட்டுக்கு சென்ற மாணவிகள் எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்தனர். இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் மாணவிகளிடம் கேட்ட போது, ஆசிரியர் தங்களுக்கு செய்த கொடுமைகளை கண்ணீர் மல்க கூறி கதறி அழுதனர். பாதிக்கப்பட்ட இரண்டு மாணவிகளுக்கும் தந்தை இல்லை. இதனால், மாணவிகளின் தாயார்கள் இந்த விவகாரத்தை எப்படி கையாளுவது என தெரியாமல் திணறினர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாணவிகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் வகுப்புகள் முடிந்த பின்பு மீண்டும் செல்லம், அந்த மாணவிகளிடம் சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறி தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் மாணவிகளின் உடலில் சில இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இரவு வீட்டுக்கு சென்ற மாணவிகள் தங்களின் தாயார்களிடம் மீண்டும் எடுத்துரைத்தனர். அவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்களிடம் தகவல் கூறினர். தகவல் அறிந்த உறவினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விடியும் வரை பொறுத்து இருந்தனர்.
நேற்று காலையில் மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் ஏராளமானோர் பள்ளிக்கூடம் முன் முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த ஏராளமான பொதுமக்களும் பள்ளி முன் கூடினர். அவர்கள் ஆசிரியர் செல்லத்தை வெளியே அனுப்பும்படி வலியுறுத்தினர்.
அத்துடன், ஒவ்வொரு வகுப்பறையாக சென்று அந்த ஆசிரியர் எங்கு இருக்கிறார் என தேடினர். அப்போது செல்லம் ஒரு வகுப்பறையில் பாடம் எடுத்து கொண்டிருந்தார். நிலைமையை புரிந்து கொண்ட செல்லம் மற்றொரு வகுப்பறைக்குள் சென்று பதுங்கி கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஆசிரியரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்றனர். இதற்காக அவரை வெளியே அழைத்து வந்த போது, பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்களிடம் இருந்து ஆசிரியரை காப்பாற்றி அழைத்து செல்ல போலீசார் முயன்றனர். இதில் போலீசாருக்கும் அடி விழுந்தது. இறுதியில் ஒரு வழியாக பொதுமக்களின் பிடியில் இருந்து செல்லத்தை போலீசார் மீட்டு வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியரை கைது செய்தனர்.
இதற்கிடையே மாவட்ட கல்வி அதிகாரி மரிய தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடமும், பாதிக்கப்பட்ட மாணவிகளிடமும் விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அனிலெட் ஷீலா, கல்வி அதிகாரிகளிடம் கூறியதாவது:–
ஆசிரியர் செல்லம் மீது ஏற்கனவே பலமுறை புகார் வந்துள்ளது. இவரை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கூறும்போது, ஆசிரியர் செல்லம், தொடர்ந்து ஆசிரியராக பணியாற்ற தகுதி அற்றவர். எனவே அவர் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த சம்பவத்தால் அந்தபகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
கைதான ஆசிரியர் செல்லத்துக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

Related Tags :
Next Story