உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்


உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 4 July 2018 4:15 AM IST (Updated: 4 July 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

ஊராட்சி செயலாளருக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். விடுமுறை நாட்களில் களப்பணி ஆய்வு செய்வதை நிறுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்தது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதில் சங்க மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட செயலாளர் வசந்தன், பொருளாளர் செந்தில் உள்பட 900 பேர் கலந்து கொண்டனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நேற்று பணிகள் பாதிக்கப்பட்டன. ஊழியர்கள் பணிக்கு வராததால் இந்த அலுவலகங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. 

Next Story