அரியலூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு


அரியலூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 4 July 2018 4:00 AM IST (Updated: 4 July 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் ரூ.3 கோடியே 34 லட்சம் மதிப்பில் 17 ஏரி மற்றும் வரத்துவாய்க்கால்கள் குடிமராமத்து பணிகளின் கீழ் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில், பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறையின் சார்பில், மல்லூர் கிராமத்தில் உள்ள நல்லேரி, மணக்குடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி, கடுகூர் கிராமத்தில் கடுகூர் பெரிய ஏரி ஆகிய ஏரிகளில் குடிமராமத்து பணிகளின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் ரூ.3 கோடியே 34 லட்சம் மதிப்பில் 17 ஏரி மற்றும் வரத்துவாய்க்கால்கள் குடிமராமத்து பணிகளின் கீழ் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று (நேற்று) அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மல்லூர் கிராமத்தில் உள்ள நல்லேரியினை குடிமராமத்து பணிகள் (2017-18) திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நல்லேரி பாசனதாரர்கள் சங்கம் மூலம் 669 மீட்டர் நீளமுள்ள ஏரி கரை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 70 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங் களின் பாசனத்திற்கும் மற்றும் குடிநீர் தேவைக்கும் பயனுள்ளதாக அமையும். மேலும், மணக்குடி, கடுகூர் பெரிய ஏரியினை குடிமராமத்து திட்டத்தின் கீழ் பெரிய ஏரி பாசன தாரர்கள் சங்கம் மூலம் ஏரிக்கரையை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாய நிலங்களின் பாசனத்திற்கும் மற்றும் குடிநீர் தேவைக்கும் பயனுள்ளதாக அமையும். இப்பணிகளின் கீழ் வரத்துவாய்க்கால், தடுப்பு சுவர், கான்கிரீட் பணிகள் மற்றும் மதகு சீரமைத்தல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது என்று கூறினார். இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) தட்சணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, கமலக்கண்ணன், மருதமுத்து, பாசனதாரர்கள் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story