குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து வீடு புகுந்து 6½ பவுன் நகைகள் திருடிய பெண் கைது
குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து வீடு புகுந்து 6½ பவுன் நகைகள் திருடிய பெண் கைது.
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை குமரன்நகரை சேர்ந்தவர் சையது முஸ்தபா. இவரது மனைவி பர்வீன் (வயது 23). இவரிடம் நேற்று முன்தினம் மாலை அடையாளம் தெரியாத பெண் ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். பர்வீன் அந்த பெண்ணுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து விட்டு, மாடியில் காய வைத்த துணிகளை எடுக்க சென்றார். பின்னர் கீழே வந்து பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 6½ பவுன் நகைகளை காணவில்லை. மேலும் தண்ணீர் கேட்டு குடித்த பெண்ணையும் காணவில்லை. இதனையடுத்து பர்வீன் தனது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு தெரிவித்து அந்த பெண்ணை தேடினார். அப்போது சிறிது தூரமே சென்று இருந்த அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில் அவர், தண்ணீர் கேட்பது போல் நடித்து நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த பெண் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த பிரபு மனைவி செல்வி(30) என்று தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story