மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணகுடி
வள்ளியூர் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட பணகுடி துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் பணகுடி, காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியாபுரம், தளவாய்புரம், தண்டையார்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை மற்றும் தெற்கு வள்ளியூர், துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் டி.பி. ரோடு, நம்பியான்விளை மற்றும் பக்கத்து கிராமங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
கடையம்
இதேபோல் கல்லிடைக்குறிச்சி கோட்டத்துக்கு உட்பட்ட ஓ துலுக்கப்பட்டி, கடையம், வீரவநல்லூர், அம்பாசமுத்திரம் ஆகிய துணை மின்நிலையங்களில் வருகிற 7-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆழ்வார்துலுக்கப்பட்டி, ஓ துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழகுத்தப்பாஞ்சான், காசிதர்மம், ஆவுடையானூர், மணல்காட்டானூர், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடானூர்.
வீரவநல்லூர்-அம்பை
கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுப்பத்து, அரிகேசவநல்லூர், ஜமீன் சிங்கம்பட்டி, வெள்ளாங்குளி, ரெங்கசமுத்திரம், அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி ஆகிய ஊர்களில் அன்று காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை, மின்வினியோக செயற்பொறியாளர்கள் எஸ்.ராஜன் ராஜ் (வள்ளியூர்), வீ.புலமாடன் (கல்லிடைக்குறிச்சி) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story