ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது அலுவலகங்கள் வெறிச்சோடின
திருச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
திருச்சி,
ஊராட்சி செயலாளர் களுக்கு பதிவுரு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும், உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். திருச்சி மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினரின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.
இதன் காரணமாக, திருச்சி கலெக்டர் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் பணியாற்றும் சங்கத்தை சேர்ந்த அலுவலர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால், அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 100 நாள் வேலை திட்டம், தொகுப்பு வீடுகள் கட்டும் பணி உள்பட துறைரீதியான அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 840 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றிருப்பதாகவும், கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும், அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்பட்டால் போராட்டம் வாபஸ் பெறப்படும், சங்கத்தின் தலைமை நிர்வாகிகள் அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story