26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டம்
26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதற்கு மாவட்ட தலைவர் ராஜன் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில், ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி உதவியாளர்கள் மற்றும் முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கணினி உதவியாளர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி இளநிலை உதவியாளராக பணி அமர்த்த வேண்டும்.
முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பாரபட்சமின்றி ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். 5 ஆண்டுகள் பணி முடித்த பதிவுறு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு கலெக்டரே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 75 பேர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் 9 பேரை தவிர மற்ற அனைவரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் பணி புரியும் அலுவலர்களும், 589 ஊராட்சிகளில் பணி புரியும் ஊராட்சி செயலாளர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 1,024 அலுவலர்களில் 677 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story