8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு: நில அளவீடு பணியை தடுத்த 8 பெண்கள் உள்பட 16 பேர் கைது
8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நில அளவீடு பணியை தடுத்த 8 பெண்கள் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பனமரத்துப்பட்டி,
சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை சேலம் மாவட்டத்தில் அரியானூரில் இருந்து பூலாவரி, பாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டி, குப்பனூர், ராமலிங்கபுரம், குள்ளம்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்கள் வழியாக செல்கிறது.
பசுமை சாலைக்காக நிலம் கையகப்படுத்த, அளவீடு செய்து எல்லைக்கற்கள் நடப்பட்டன. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல்வேறு கிராமங்களில் மக்கள் நில அளவீடு செய்யும் போது, கதறி அழுதனர். மேலும் கருப்புக்கொடி கட்டி போராட்டத்திலும் ஈடுபட்டனர். சில இடங்களில் நடப்பட்ட எல்லைக்கற்களை பிடுங்கி எறிந்தனர்.
இந்த நிலையில் 2-வது கட்டமாக எல்லைக்கற்கள் நடப்பட்ட இடங்களில் ஆய்வு பணி தொடங்கப்பட்டுள்ளது. எல்லைக்கற்கள் சரியாக நடப்பட்டுள்ளதா? 2 கற்களுக்கு இடையே உள்ள தூரம் சரியாக இருக்கிறதா? விவசாயிகளின் நிலம் எவ்வளவு கையகப்படுத்தப்படுகிறது, அதில் உள்ள மரங்கள், பயிர்கள் என்னென்ன என கணக்கிடும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நேற்றுமுன்தினம் மதியம் பாரப்பட்டியில் அதிகாரிகள் எல்லைக்கற்களுக்கு இடையே உள்ள நிலங்களை மீண்டும் அளவீடு செய்ய சென்றனர். அப்போது விவசாயிகள் அளவீடு செய்து கணக்கெடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் சமரசம் ஏற்படாததால் மாலை 4 மணி வரை காத்திருந்த அதிகாரிகள், கணக்கீடு பணியில் ஈடுபடாமல் திரும்பி சென்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை நில எடுப்பு தாசில்தார் பத்மபிரியா தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் பாரப்பட்டிக்கு அளவீடு செய்யப்பட்ட இடத்துக்கு சென்றனர். அப்போது பாரப்பட்டி பூமாங்காடு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கணக்கீடு செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதனை விவசாயிகள் ஏற்கவில்லை. தொடர்ந்து பெண் விவசாயிகள் சிலர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அங்கு வந்து அவர்களை கலைந்து செல்லக்கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரநாராயணன் தலைமையில் போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். இதனால் பெண்கள் அங்கேயே தரையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து கதறி அழுதனர். தொடர்ந்து பெண் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பூமாங்காடு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி (வயது 27), விஜயலட்சுமி (32), கவுசல்யா (20), சந்திரா (30), தாரகேஸ்வரி (38), லட்சுமி (30), செல்வி (32), கோகிலா (32) ஆகிய 8 பெண்கள் மற்றும் விவசாயிகள் சின்னப்பன் (50), ராமசாமி (45), காமராஜ் (39), வரதராஜ் (35), குணசேகரன் (55), கிருஷ்ணராஜ் (20), ரமேஷ் (34), ஆறுமுகம் (72) ஆகிய 16 பேரை போலீசார் கைது செய்து, மல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்கள் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் சேலம் ரூரல் துணை சூப்பிரண்டு சங்கரநாராயணன் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதன்பின்னர் அதிகாரிகள் எல்லைக்கற்கள் நடப்பட்ட இடங்களில் அளவீடு பணியிலும், பயிர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியிலும் ஈடுபட்டனர். இதே போல கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நில எடுப்பு தாசில்தார் செம்மலை தலைமையில் அதிகாரிகள் நில அளவீடு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மாலையில் கைது செய்யப்பட்ட 16 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இதனிடையே அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள ராமலிங்கபுரத்திலும் 8 வழி பசுமை சாலைக்கு விவசாயிகள், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அங்குள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று கிராம மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். அவர்கள் பசுமை வழிச்சாலை இந்த பகுதியில் வரக்கூடாது என்று வேண்டி பூஜை செய்தனர். அப்போது தனம், வெண்ணிலா ஆகிய 2 பெண்கள் சாமியாடி அருள்வாக்கு கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த பூஜையில் நிலம் கையகப்படுத்தப்படு வதால் பாதிக்கப்படும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story