மின்சார ரெயில் தாமதமானதால் தண்டவாளத்தில் இறங்கி பயணிகள் மறியல் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் மின்சார விரைவு ரெயில் சரியான நேரத்திற்கு புறப்படாததால் ஆவேசம் அடைந்த பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மற்றொரு ரெயில் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரக்கோணம்,
அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 7.10 மணிக்கு விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும், அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களும் சென்று வருகின்றனர். ஆனால் கடந்த சில தினங்களாக இந்த ரெயில் சரியான நேரத்திற்கு இயக்கப்படவில்லை.
நேற்று காலை வழக்கம்போல் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் முதலாவது பிளாட்பாரத்தில் தயாராக நின்றிருந்த அந்த ரெயிலில் ஏறினர். ஆனால் காலை 7.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் 7.30 மணி வரை புறப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 500-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயிலில் இருந்து கீழே இறங்கி என்ஜினுக்கு முன்பாக தண்டவாளத்தில் இறங்கி மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் அடுத்த தண்டவாளத்தில் சற்று தொலைவில் வந்து கொண்டு இருந்தது. மறியலில் ஈடுபட்ட பயணிகள் அந்த தண்டவாளத்திலும் நின்று கொண்டிருப்பதை பார்த்த என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். பயணிகள் அந்த ரெயிலை நோக்கி ஓடிச்சென்று ரெயில் முன்பாக நின்று கொண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் முகேஷ்குமார் ரஜாக், ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பயணிகள் கூறியதாவது:-
நாங்கள் தினமும் காலை 7.10 மணிக்கு செல்லும் மின்சார விரைவு ரெயிலில் சென்றால்தான் குறித்த நேரத்திற்கு எங்களால் வேலைக்கு செல்ல முடியும். ரெயில் புறப்படுவதில் காலதாமதம் ஏற்படுவதால் நாங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் விடுப்பு எடுக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. கடந்த சில தினங்களாக இந்த ரெயில் காலதாமதமாக சென்று வருகிறது. இது குறித்து ரெயில் நிலைய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் ரெயிலை சரியான நேரத்தில் புறப்பட செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரெயில் காலதாமத பிரச்சினைக்கு ரெயில்வே நிர்வாகம் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பயணிகளிடம் போலீசார், ரெயில்வே அதிகாரிகள் விரைவு மின்சார ரெயில் சரியான நேரத்திற்கு சென்று வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன் பின்னர் தண்டவாளத்தில் நின்று போராட்டம் நடத்தி கொண்டிருந்த பயணிகள் 9 மணியளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டம் காரணமாக சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் பாசஞ்சர் ரெயில் ஆகிய ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் அந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் பரிதவிப்புக்குள்ளாயினர். 9 மணிக்கு பிறகு ரெயில்கள் ஒவ்வொன்றாக சென்றது.

Related Tags :
Next Story