நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.2½ கோடியில் ஆசிரியர் குடியிருப்பு
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.2½ கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள ஆசிரியர் குடியிருப்பை எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நெல்லை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.2½ கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள ஆசிரியர் குடியிருப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திறப்பு விழா
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.2½ கோடி செலவில் ஆசிரியர்களுக்கான 12 குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதனை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதேபோல் சேலம், திருப்பூர், மதுரை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.
இதையொட்டி நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் ஆசிரியர் குடியிருப்பில் விழா நடைபெற்றது. துணை வேந்தர் பாஸ்கர் குத்துவிளக்கு ஏற்றினார். இதில் பதிவாளர் சந்தோஷ் பாபு, புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும் 36 குடியிருப்புகள்
இதுகுறித்து துணை வேந்தர் பாஸ்கர் கூறியதாவது:-
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 27 ஆண்டு வரலாற்றில் ஆசிரியர்களின் கனவான ஆசிரியர் குடியிருப்புகள் தற்போது கட்டி முடிக்கப்பட்டு முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. மேலும் 2-வது தொகுப்பாக ஆசிரியர்களுக்கு 12 குடியிருப்புகளும், ஆசிரியர் இல்லாத பணியாளர்களுக்கு 24 குடியிருப்புகளும் கட்டுவதற்கு ரூ.8¾ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த குடியிருப்புகள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைந்திருப்பதால் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும்.
இவ்வாறு துணை வேந்தர் பாஸ்கர் கூறினார்.
Related Tags :
Next Story