உல்லாசம் அனுபவித்த போது மூச்சு திணறி இறந்த வெளிநாட்டு இளம்பெண் ஒரு வருடத்துக்கு பிறகு காதலன் மீது வழக்குப்பதிவு


உல்லாசம் அனுபவித்த போது மூச்சு திணறி இறந்த வெளிநாட்டு இளம்பெண் ஒரு வருடத்துக்கு பிறகு காதலன் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 4 July 2018 4:00 AM IST (Updated: 4 July 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

மும்பை ஓட்டலில் கடந்த ஆண்டு மர்மச்சாவு அடைந்த வெளிநாட்டு இளம்பெண் உல்லாசம் அனுபவித்த போது, மூச்சு திணறி இறந்தது தெரியவந்துள்ளது.

மும்பை,

மும்பை ஓட்டலில் கடந்த ஆண்டு மர்மச்சாவு அடைந்த வெளிநாட்டு இளம்பெண் உல்லாசம் அனுபவித்த போது, மூச்சு திணறி இறந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவரது காதலன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

வெளிநாட்டு ஜோடி

இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் ஓரியன் யாகோவ் (வயது23). இவர் தனது 20 வயது காதலியுடன் கடந்த ஆண்டு சுற்றுலாவிற்காக மும்பை வந்திருந்தார். இருவரும் கொலபாவில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். மார்ச் மாதம் ஓட்டல் அறையில் ஓரியன் யாகோவின் காதலி திடீரென பேச்சு, மூச்சு இன்றி கிடந்தார்.

இதை பார்த்து பதறி போன அவர் ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

மர்மச்சாவு

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் இஸ்ரேல் கொண்டு செல்லப்பட்டது. ஓரியன் யாகோவும் அங்கு சென்று விட்டார். அவரது காதலி இறந்ததற்கான காரணம் தெரியாமல் இருந்தது. அவரது மர்மச்சாவு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், அந்த இளம்பெண்ணின் சாவு தொடர்பான தடயஅறிவியல் ஆய்வு அறிக்கை தற்போது தான் போலீசுக்கு கிடைத்தது. அதில், உடலுறவின் போது அவர் மூச்சு திணறி உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

வழக்குப்பதிவு

சம்பவத்தன்று, ஓரியன் யாகோவ் காதலியுடன் உல்லாசமாக இருந்து உள்ளார். அப்போது, இளம்பெண்ணின் கழுத்து பகுதியில் அதிகளவில் அழுத்தி இருக்கிறார். இதன் காரணமாக அவர் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து போலீசார் ஓரியன் யாகோவ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story