வடபழனி பகுதியில் அடுத்தடுத்து 3 பேரிடம் செல்போன் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வடபழனி பகுதியில் அடுத்தடுத்து 3 பேரிடம் செல்போன் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 July 2018 4:57 AM IST (Updated: 4 July 2018 4:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வடபழனி பகுதியில் அடுத்தடுத்து 3 பேரிடம் செல்போன் பறித்த சம்பவம் நடந்துள்ளது.

பூந்தமல்லி,

சென்னை வடபழனி, தோஷி கார்டன், ஆற்காடு சாலையை சேர்ந்தவர் செழியன் (வயது 48). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வடபழனி 100 அடி சாலையில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் செழியனின் செல்போனை பறித்துக்கொண்டு சென்று விட்டனர்.

இதேபோல் அப்பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த வடபழனியை சேர்ந்த ஜெகத் ஸ்ரீ சாய் பிரசன்னா (21) என்பவரிடம் இருந்த செல்போனையும், சாலிகிராமத்தை சேர்ந்த கார்த்திக் (31) என்பவர் வைத்திருந்த செல்போனையும் மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

இதுகுறித்து 3 பேரும் வடபழனி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். 

Next Story