தாமிரபரணி ஆற்றில் புஷ்கர திருவிழா காஞ்சீபுரத்தில் விஜயேந்திரர் ஆலோசனை


தாமிரபரணி ஆற்றில் புஷ்கர திருவிழா காஞ்சீபுரத்தில் விஜயேந்திரர் ஆலோசனை
x
தினத்தந்தி 4 July 2018 5:17 AM IST (Updated: 4 July 2018 5:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை தாமிரபரணி புஷ்கர திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் காஞ்சி சங்கர மடத்தில் நடந்தது.

காஞ்சீபுரம்,

நெல்லை தாமிரபரணி ஆற்றில் புஷ்கர திருவிழா வருகிற அக்டோபர் மாதம் 12-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த விழா குறித்த ஆலோசனை கூட்டம் காஞ்சி சங்கர மடத்தில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை தாங்கினார். தர்மபுரம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், திருப்பனந்தால் காசி மடம் கிளையின் இளைய சன்னிதானம் திருஞானசம்பந்தர், திருவாவடுதுறை ஆதீனம் காஞ்சீபுரம் கிளை சுந்தரமூர்த்தி தம்பிரான், கோயம்புத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர தம்பிரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தாமிரபரணி புஷ்கர திருவிழாவை சிறப்பாக நடத்துவது எனவும், வருகிற பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

Next Story