சின்னமனூர் அருகே ரூ.40 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட செங்குளத்தின் கரை உடைப்பு
சின்னமனூர் அருகே, ரூ.40 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட செங்குளத்தின் கரை உடைந்தது.
சின்னமனூர்,
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 15 ஆயிரம் ஏக்கருக்கு, முதல்போக நெல் சாகுபடிக்காக கடந்த மாதம் 17-ந்தேதி முதல் முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சின்னமனூர் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் கருங்கட்டான் குளம், உடையகுளம், செங் குளத்தில் அந்த தண்ணீரை தேக்கி வைப்பது வழக்கம்.
அதன்படி கடந்த ஒரு வாரமாக சென்ற தண்ணீரால் உடையகுளம் நிரம்பி செங்குளத்துக்கு மறுகால் பாய்ந்தது. ஆனால் செங்குளத்தின் கரைப்பகுதியில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. இதைத் தொடர்ந்து செங்குளத்துக்கு தண்ணீர் செல்வது உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும் செங்குளத்தில் உடைந்த கரைப்பகுதியில் மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறையினர் அடுக்கி வைத்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 18 குளங்களை தூர்வாரும் பணி மற்றும் கரையை பலப்படுத்தும் பணி ரூ.6½ கோடி மதிப்பில் நடந்தது. அதன்படி ரூ. 40 லட்சம் செலவில் செங்குளம் சீரமைக்கப்பட்டது. செங்குளம் தடுப்பணையில் தொடங்கி உடையகுளம், தும்பைமடை வரை பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டது. மேலும் செங்குளத்தின் கரைப்பகுதியம் சீரமைக்கப்பட்டது.
ஆனால், செங்குளத்தின் கரைப்பகுதியை சரிவர சீரமைக்கவில்லை என்றும், இதனால் கரைப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சின்னமனூர் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் பட்டா நில விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவிடம் விவசாயிகள் புகார் செய்தனர்.
குளத்தில் இருந்து மண்ணை எடுத்து கரையை பலப்படுத்தும் பணி கடந்த 10 நாட்களாக நடந்தது. ஆனால் சிறிதளவு கூட தண்ணீரை தேக்கி வைக்க முடியாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
முதல் போக நெல் சாகுபடிக்கு உடையகுளம், செங்குளத்தில் தேக்கி வைக்கப்படுகிற தண்ணீர் தான் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு செங்குளத்தில் தண்ணீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே செங்குளம் சீரமைப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.40 லட்சத்தில் முறைகேடு நடந்திருப்பதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story