ஈரோடு மாவட்டத்தில் தொழில் நெறி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்:கலெக்டர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் ஒருவார காலம் தொழில் நெறி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் இளைஞர்களின் திறனை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இளை ஞர்கள் தங்கள் வேலை பெறும் திறனை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தொழில்நெறி விழிப்புணர்வு வாரம் மற்றும் திறன் வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி வருகிற 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
9-ந் தேதி தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வார ஊர்வலம் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவ லகம், தாசில்தார் அலுவல கங்கள், ஊராட்சி அலுவல கங்களில் இளைஞர்- இளம் பெண்களுக்கு திறன் பயிற்சி தொடர்பான பதாகைகள் அமைத்தல், துண்டு பிரசுரங் கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
10-ந் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
11-ந் தேதி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக் கூடத்தில் மகளிருக்கான தொழில் நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பள்ளிக்கூட மாணவிகள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம்? என்பது பற்றி ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து பள்ளிக்கூட மாணவிகளுக் கான வினாடி-வினா, கட்டுரை, சுலோகம் எழுதுதல் போட்டிகள் நடக்கின்றன. அதே நாளில் கிராம அளவில் பெண்களுக்கு மகளிர் சுயஉதவிக்குழு மூலம் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
12-ந் தேதி பள்ளி ஆசிரியர் கள் மற்றும் கல்லூரி பேராசிரி யர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதலுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவ- மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, விழிப்புணர்வு சுவரொட்டிகள் தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடக் கிறது.
13-ந் தேதி ஈரோடு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகள் மாணவ-மாணவிகளுடன் தங்கள் அனுபவங்களை எடுத்துக்கூறுகிறார்கள். அரசு தொழில் பயிற்சி மைய(ஐ.டி.ஐ.) மாணவர்கள் உருவாக்கிய படைப்புகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
இதுபற்றிய மேலும் விவரங் களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஈரோடு அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள லாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story