பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 July 2018 4:00 AM IST (Updated: 5 July 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினை சேர்ந்த டாக்டர்கள் நேற்று மதியம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கும் ஊதியத்திற்கு இணையாக, தமிழக அரசும் டாக்டர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினை சேர்ந்த டாக்டர்கள் சென்னையில் நேற்று முன்தினம் முதல் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதில் 5 டாக்டர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினை சேர்ந்த டாக்டர்கள் நேற்று மதியம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் அறிவழகன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் டாக்டர்கள் செந்தில்குமார், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் பொருளாளர் தனபால், அமைப்பு செயலாளர் அன்பரசு உள்பட டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story