பச்சையம்மன், மகா மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
மேலராமநல்லூர், குன்னத்தில் உள்ள பச்சையம்மன், மகா மாரியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருமானூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே மேலராமநல்லூர் கிராமத்தில் பச்சையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விநாயகர், காமாட்சியம்மன், பாலமுருகன், தட்சணாமூர்த்தி, காலபைரவர், மீனாட்சியம்மன், அர்த்தநாரீஸ்வரர், காத்தாயியம்மன், பூங்காவனத்து அம்மன், பொன்னியம்மன், வனதுர்க்கையம்மன், பாப்பாத்தியம்மன், செல்லியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதிகளும் உள்ளது. கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து 1, 2 மற்றும் 3 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை 10 மணியளவில் கலசம் புறப்பாடு நடைபெற்றது.
அதை தொடர்ந்து வாணவேடிக்கை, நாதஸ்வர இசையுடன் சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்திருந்த கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் பரிவார தெய்வங்களான விநாயகர், காமாட்சியம்மன், பாலமுருகன், தட்சணாமூர்த்தி உள்ளிட்ட சுவாமிகளின் மூலஸ்தான விமானத்திற்கு முதலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க பச்சையம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் மேலராமநல்லூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையடுத்து 1, 2 மற்றும் 3 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை 10 மணியளவில் கலசம் புறப்பாடு நடைபெற்றது. அதை தொடர்ந்து வாணவேடிக்கை, நாதஸ்வர இசையுடன் சிவாச்சாரியார்கள் யாக சாலையில் வைத்திருந்த கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர்.
அதை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க மகா மாரியம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மகா மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை குன்னம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story