தனியார் நிலங்களில் மரம் வளர்க்கும் திட்டம் வன அலுவலர் சம்பத் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் நிலங்களில் வனத்துறை மூலம் மரம் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மாவட்ட வன அலுவலர் சம்பத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை வளத்தை பாதுகாத்திடவும், மழைவளம் பெற்றிடவும் ஏதுவாக தனியாருக்கு சொந்தமான பட்டா நிலங்களில் தமிழக வனத்துறையின் பங்களிப்புடன் “வேளாண் காடு வளர்ப்பு திட்டம்” செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பல ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள், மரம் வளர்க்க நினைப்பவர்கள் தங்களது நிலங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாம்.
தேக்கு, செம்மரம், மலைவேம்பு, வேம்பு, புங்கை மற்றும் பழம் தரும் மரக்கன்றுகள் வனத்துறை மூலமாக இலவசமாக வழங்கப்படுகிறது. மரக்கன்றுகளை சிறந்த முறையில் வளர்ப்பவர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படுவதுடன், குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை கவாத்து, களை எடுத்தல் போன்ற பணிகளும் வனத்துறை மூலமாகவே செய்து கொடுக்கப்படும்.
மரம் வளர்க்கும் திட்டத்துக்கான மரக்கன்றுகள் வல்லநாடு, முருகன்புரம், ஓட்டப்பிடாரம், ஊத்துப்பட்டி வனப்பகுதிகளில் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது இங்கு சுமார் 3 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில் இருக்கிறது.
மரம் வளர்க்கும் இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெற விரும்பும் விவசாயிகள், நிலங்களின் உரிமையாளர்கள் தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண்கள், கிராமம், தாலுகா, நிலப்பரப்பு, சர்வே எண், பட்டா எண், நீர் ஆதாரம், மண் வகை, தேவையான மரக்கன்றுகள் குறித்த விவரத்துடன், நிலத்திற்கான பட்டா உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களுடன் தங்கள் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகங்களில் விண்ணப்பங்களை கொடுக்கலாம்.
விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேவையான மரக்கன்றுகள் வனத்துறையின் மூலமாக இலவசமாக வழங்கப்படும். இந்த மரம் வளர்க்கும் திட்டத்தின் மூலமாக மரக்கன்றுகளை பெறுபவர்கள், வாங்கிய மரக்கன்றுகளை குறைந்தது 4 வருடங்களுக்கு சரியான முறையில் நட்டு பராமரித்து வளர்ப்பேன் என்ற உத்தரவாதத்தையும் தவறாமல் வழங்கிட வேண்டும்.
மாவட்டத்தில் மரக்கன்றுகள் பெற விரும்புபவர்கள், இதுதொடர்பான விவரங்களுக்கு தூத்துக்குடி வனச்சரக அலுவலரை 94428 04001 என்ற எண்ணிலோ, மாவட்ட வனத்துறை அலுவலகத்தை 0461-2346600 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை விவசாயிகள், மரம் வளர்க்க விரும்பும் சமூக ஆர்வலர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story