18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் நீதி கிடைக்கும் டி.டி.வி. தினகரன் பேட்டி


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் நீதி கிடைக்கும் டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 5 July 2018 4:30 AM IST (Updated: 5 July 2018 1:03 AM IST)
t-max-icont-min-icon

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இம்மாத இறுதிக்குள் விரைவில் நீதி கிடைக்கும் என நம்புவதாக டி.டி.வி. தினகரன் கூறினார்.

நாமக்கல்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இம்மாத இறுதிக்குள் விரைவில் நீதி கிடைக்கும் என நம்புகிறோம். டெல்லி துணை நிலை கவர்னர் அதிகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்க்கட்சிகள் வரவேற்று உள்ளன. ஆனால் தமிழக கவர்னர் ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளது என அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இது இந்த ஆட்சி அடிமைகள் ஆட்சி என்பதை காட்டுகிறது.

8 வழிச்சாலை திட்டம் போராடி பெற்றது என கூறிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தற்போது மத்திய அரசு திட்டம் என கூறி வருகிறார். 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை இந்த அரசு தொடர்ந்து கைது செய்து வருவதால் இது கொடுங்கோல் ஆட்சி என்றே கூற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story