கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு; 5 பேர் காயம்


கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு; 5 பேர் காயம்
x
தினத்தந்தி 4 July 2018 11:00 PM GMT (Updated: 4 July 2018 7:57 PM GMT)

மேலூர் அருகே கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

மேலூர், 

மேலூர் அருகே உள்ள மட்டங்கிபட்டியில் மந்தை கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி அங்குள்ள கண்மாய் பகுதியிலுள்ள மாட்டுத்தொழுவத்தில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளாமன மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

நிகழ்ச்சியில் கிராமத்தினர் சார்பில் ஜவுளி பொட்டலங்களை சுமந்து வந்து ஒவ்வொரு காளைக்கும் மரியாதை செய்து அவிழ்த்துவிடப்பட்டன. இதில் காளைகள் அவிழ்க்கப்பட்டதும் சீறிப்பாய்ந்து சென்றன.

மஞ்சுவிரட்டில் காளையை மடக்க முயன்ற 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தயாராக வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மஞ்சுவிரட்டில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், சிறப்பாக மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும் அண்டா, சைக்கிள், குடம், ரொக்கப்பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

பாரம்பரிய முறைப்படி மட்டங்கிபட்டி பொதுமக்கள், கிராம முக்கியஸ்தர்கள் மஞ்சுவிரட்டுக்கு சென்றுவிட்டு வரும்வழியில் மரியாதை செய்து வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story