சுங்குவார்சத்திரம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 பேர் கைது
சுங்குவார்சத்திரம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேர் தப்பி ஓடி விட்டனர்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் மர்ம நபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் யாரையோ கொலை செய்வதற்காக மோட்டார் சைக்கிள்களில் சுற்றி வருவதாக போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு தகவல் வந்தது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் கூடுதல் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், சுங்குவார்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் சக்கரவர்த்தி மற்றும் போலீசார் சுங்குவார்சத்திரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். இதை கண்டு அவர்களின் பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் வந்த வழியிலேயே திரும்பி தப்பிச் சென்றனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், பிடிபட்ட 2 பேரிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் சீட்டுக்கு அடியில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டனர்.
மேலும் விசாரணையில் அவர்கள் சுங்குவார்சத்திரத்தை அடுத்த எச்சூர் பகுதியை சேர்ந்த ஆல்பர்ட் (வயது 23), சக்திவேல் (20) என்பதும், கூட்டாளிகளுடன் சேர்ந்து யாரையோ கொலை செய்ய திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிள், ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் யாரை கொலை செய்ய வந்தனர்? உடன் வந்தவர்கள் யார்? என தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story