சேலம் 8 வழி பசுமை சாலைக்கு கடும் எதிர்ப்பு: 2 விவசாயிகள் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி
8 வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் அருகே 2 விவசாயிகள் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். வாழ வழிவிடுங்கள் என்று தாசில்தார் காலில் விழுந்து விவசாயி கதறினார்.
பனமரத்துப்பட்டி,
சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை சேலம் மாவட்டத்தில் அரியானூரில் இருந்து பூலாவரி, பாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டி, குப்பனூர், ராமலிங்கபுரம், குள்ளம்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்கள் வழியாக செல்கிறது.
பசுமை சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பல்வேறு கிராமங்களில் நில அளவீடு செய்யும் போது விவசாயிகள், பெண்கள் கதறி அழுதனர். இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் பசுமை வழி சாலை அமைய உள்ள இடங்களில் எல்லைக்கற்களை நட்டனர். சில இடங்களில் விவசாயிகள் எல்லைக்கற்களை பிடுங்கி எறிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது 2-வது கட்டமாக எல்லைக்கற்கள் நடப்பட்ட இடங்களில் ஆய்வு பணி தொடங்கப்பட்டுள்ளது. எல்லைக்கற்கள் சரியாக நடப்பட்டுள்ளதா? 2 கற்களுக்கு இடையே உள்ள தூரம் சரியாக இருக்கிறதா? விவசாயிகளின் நிலம் எவ்வளவு கையகப்படுத்தப்படுகிறது, அதில் உள்ள மரங்கள், பயிர்கள் என்னென்ன என கணக்கிடும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் சேலம் அருகே பாரப்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட கூம்மாங்காடு பகுதியில் 2-ம் கட்டமாக நிலஅளவீடு செய்யும் பணி மீண்டும் நேற்று காலை நடந்தது.நில எடுப்பு தாசில்தார் பத்மபிரியா தலைமையில் வருவாய்துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் அடங்கிய 30-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ரமேஷ்(வயது 32) என்பவரின் நிலத்தை வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர். அப்போது அங்கு வந்த ரமேஷ், வருவாய்த்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரநாராயணன் தலைமையிலான போலீசார் அவரை சமாதானப்படுத்தினர்.
அதன்பிறகு அதே பகுதியை சேர்ந்த விவசாயி குணசேகரன்(40) என்பவரது தோட்டத்தில் அதிகாரிகள் அளவீடு செய்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குணசேகரன் தனது தென்னை மரத்தை கட்டிப்பிடித்து கதறி அழுதார். எங்களது வாழ்வாதாரத்தை அழித்தால் நாங்கள் எங்கே செல்வோம். எங்கள் நிலத்தை அரசு எடுத்து கொண்டால் நாங்கள் பிழைப்புக்கு எங்கே செல்வோம் என்று கூறி கதறினார். பின்னர் அவர் திடீரென்று நிலஎடுப்பு தாசில்தார் பத்மபிரியா காலில் விழுந்து எங்கள் நிலத்தை விட்டு விடுங்கள், வாழ வழிடுங்கள் என்று கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. பின்னர் அவரை வருவாய்த்துறையினர் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பின்னர் மாலை 3 மணிக்கு முத்துகிருஷ்ணன்(35) என்பவரது தோட்டத்தில் அதிகாரிகள் அளவீடு செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த முத்துகிருஷ்ணன் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது தோட்டத்து கிணற்றில் குதித்தார். இதனால் வருவாய்த்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.அங்கு நின்றிருந்த தீயணைப்பு வீரர்கள் உடனே கிணற்றில் குதித்து முத்துகிருஷ்ணனை கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர். அதன்பின்னர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மற்றொரு விவசாயி மாணிக்கம் (35) அங்கு 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியவாறே கிணற்றில் குதித்தார். அவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 2 விவசாயிகளிடமும், 8 வழி சாலை அமைப்பதற்காக அரசு கையகப்படுத்தும் நிலத்துக்கு உரிய இழப்பீடு பெற்று தருவதாகவும், விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு உள்ள பயிர்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். தற்கொலை செய்து கொள்ளும் முடிவை விவசாயிகள் அறவே கைவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். பின்னர் மாலை 4 மணிக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறியதாவது:-தற்போது 8 வழி சாலை அமைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் ஆங்கிலேயர் காலத்தின் அடக்குமுறையை போன்று அதிகாரிகளை வைத்து மிரட்டி விவசாயிகளிடம் நிலத்தை கையகப்படுத்துவது சரியில்லை. இது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே சேலம்-சென்னைக்கு 3 வழிகளில் சாலை உள்ளது. அதை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story