மதுராந்தகத்தில் பார் ஊழியர்களை தாக்கிய 3 பேர் கைது


மதுராந்தகத்தில் பார் ஊழியர்களை தாக்கிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 5 July 2018 4:00 AM IST (Updated: 5 July 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகத்தில் பார் ஊழியர்களை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் பல பார்கள் இயங்கி வருகிறது. இந்த பார்கள் தென்மாவட்டங்களை சேர்ந்த சில முக்கிய அரசியல்வாதிகள் ஆதரவோடு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பவுஞ்சூரில் அனுமதியின்றி பார் நடத்தி வந்த தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலம்பேட்டை கனகசபை என்பவரது மகன் ராஜ்குமார் (வயது 37), சிவகங்கை மாவட்டம் ஏரணியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் பெரியசாமி (26), இருவரும் பாரில் வசூலான பணத்தை கொடுப்பதற்காக மதுராந்தகத்தில் பார் நடத்தி வரும் மேலாளரான அய்யப்பனிடம் சென்றனர்.

அப்போது மதுராந்தகம் பஸ் நிலையம் அருகே மதுராந்தகம் வன்னியர்பேட்டையை சேர்ந்த சபரி (32), கார்த்திக் (22), எழில் (24) ஆகியோர் பெரியசாமி மற்றும் ராஜ்குமாரை தாக்கி உள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story